E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1117/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 1117/ '19

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவம் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பன்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில், ஹெட்டிபொல எனும் பெயரில் பிராந்திய வைத்தியசாலையொன்று உள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனின், இவ்வைத்தியசாலைக்கான அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பணியாட்டொகுதியின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

      (iii) தற்சமயம் இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாவை என்பதையும்;

      (iv) இப்பிரதேசத்தின் சொத்தான மேற்படி வைத்தியசாலைக்கு தேவையான பௌதீக மற்றும் மனித வளங்களை பெற்றுக்கொடுத்து, இவ்வைத்தியசாலையை மேலும் விருத்தி செய்வதற்கு அமைச்சு எடுக்கும் வழிமுறைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-11-07

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks