E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1153/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ காதர் மஸ்தான், பா.உ.

    1. 1153/ '19

      கௌரவ கே. காதர் மஸ்தான்,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சருமானவரை கேட்பதற்கு,—

      (அ) (i) வவுனியா மாவட்டத்தின் வெங்கலசெட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு கிராமத்தை அண்மித்த இராசேந்திர குளத்தில் அமைந்துள்ள அரச காணி 1970 ஆம் ஆண்டு தொடக்கம் அப்பிரதேச மக்களினால் சேனைப் பயிர்ச் செய்கைக்கும் மந்தை வளர்ப்புக்கும் பிரயோகிக்கப்பட்டு வருவதை அறிவாராவென்பதனையும்;

      (ii) ஆமெனில், காணி ஆணையாளர் நாயகத்தின் 2013/01 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கமைய காணிக் கச்சேரிகளின் ஊடாக காணி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியான நபர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதனையும்;

      (iii) அவர்களுடைய பெயர்கள் மற்றும் ஏனைய விபரங்களையும்;

      (iv) இதுவரையில் அவர்களில் அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றவர்களின் எண்ணிக்கையும்;

      (v) அடையாளங் காணப்பட்ட அனைவருக்கும் அனுமதிப்பத்திரம் வழங்குவதிலுள்ள தடைகள் என்னவென்பதனையும்;

      (vi) அவ்வாறாயின் குறித்த தடைகளை நீக்கி அனைவருக்கும் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமா என்பதனையும்;

      (vii) எப்போது அக்காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுமென்பதனையும்;

      அவர் இச்சபைக்கு அறிவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-11-07

கேட்டவர்

கௌரவ காதர் மஸ்தான், பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks