பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1156/ '19
கௌர டீ.வீ.சானக்க,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015 சனவரி தொடக்கம் இற்றைவரையில்,
(i) வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) "கம் உதாவ" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iii) வீடமைப்பு நிர்மாண கருத்திட்டம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;
ஆண்டு வாரியாக தனித்தனியே அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் போது தவணைக் கொடுப்பனவு முறையில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளனவா;
(ii) ஆமெனின், இவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய மொத்த கடன் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) "கம் உதாவ" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடுகளின் பரப்பளவு எத்தனை சதுர அடிகள் என்பதையும்;
(iv) கருத்திட்டத்திற்கு கருத்திட்டம் வீடுகளின் சதுரஅடிகளின் அளவு மாற்றமடையுமா என்பதையும்;
(v) "கம் உதாவ" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் வழங்கப்படுமா என்பதையும்;
(vi) வீடுகளை பெற்றுக்கொடுக்கும் போது பயனாளிகளை தெரிவு செய்வதற்கு ஏதேனும் முறையியலொன்று உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-11-07
கேட்டவர்
கௌரவ டி.வீ. சானக, பா.உ.
அமைச்சு
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks