E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1168/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.

    1. 1168/ '19

      கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை சுங்க திணைக்களத்தின் சுங்க உத்தியோகத்தர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவின் கணிப்பீடு தாபனவிதிக் கோவையின் VIII ஆவது அத்தியாயத்தின் 6.1 உப பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) இதற்கு மேலதிகமாக இலக்கம் 1570/17 மற்றும் 2007.10.26 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் சுங்க உத்தியோகத்தர்களை மேலதிகநேர சேவையில் ஈடுபடுத்துவதற்கான கட்டணம் குறித்துரைக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      (ஆ) (i) சுங்க உத்தியோகத்தர்களுக்கு மேலதிகநேரக் கொடுப்பனவு செலுத்தும் போது மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் ஏற்பாடுகள் பின்பற்றப்படுவதில்லை என்பதையும்;

      (ii) மேற்படி உத்தியோகத்தர்களுக்கு மிகக் குறைந்த மேலதிக நேரக் கொடுப்பனவு செலுத்தப்படுவதால், அவர்களுக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்படுவதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iii) ஆமெனின், சுங்க உத்தியோகத்தர்களுக்கு சட்டரீதியாக கிடைக்கவேண்டிய மேலதிக நேரக்கொடுப்பனவினை தாபனவிதிக் கோவையின்படி கணிப்பிடுவதற்கும் இதுவரையில் உரியவாறு செலுத்தாத மேலதிகநேரக் கொடுப்பனவை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-11-07

கேட்டவர்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks