பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1177/ '19
கெளரவ டலஸ் அழஹப்பெரும,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்கத்தினால் நிருவகிக்கப்படுகின்ற சிறுவர் இல்லங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) அவற்றில் இருக்கின்ற மொத்த சிறுவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) மேற்படி எண்ணிக்கை ஒவ்வொரு சிறுவர் இல்லத்தின் அடிப்படையில் வெவ்வேறாக யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தனியார் துறை, சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களினால் நிருவகிக்கப்படுகின்ற சிறுவர் இல்லங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு இல்லத்திலும் தங்கியுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, முகவரி மற்றும் நிருவகிக்கும் நிறுவனத்தின் பெயர் வெவ்வேறாக யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கடந்த இருபது வருட காலப்பகுதிக்குள் பெற்றோர்/பாதுகாவலர் அந்தஸ்தை சட்டபூர்வமாக உரித்தாக்கிக் கொண்டு வெளிநாட்டவர்களினால் பொறுப்பு கையேற்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி சிறுவர்கள் தற்போது வாழும் நாடு, அவர்களின் பாதுகாவலர்களின் முகவரிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) (i) நாட்டினுள் காணப்படுகின்ற ஏதேனும் சிறுவர் இல்லம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி உத்தரவு சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலாயின், சம்பந்தப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-11-07
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks