E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0104/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 104/2020

      கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) 2016 ஆம் ஆண்டில் கொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுத களஞ்சியம் வெடித்தமையினால்,

      (i) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) அங்கவீனமுற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iv) உயிரிழந்த ஆளொருவருக்காக அரசாங்கத்தின் சார்பில் செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;

      (v) சேதமடைந்த வீடுகளுக்காக செலுத்தப்பட்ட கூடியபட்ச மற்றும் குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;

      (vi) இடம்பெயர்ந்த சகலருக்கும் நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vii) இடம்பெயர்ந்த குடும்பமொன்றிற்கு நிரந்தர வீடொன்று பெற்றுக் கொடுக்கப்பட்ட அண்மித்த திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-06

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks