E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0117/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 117/2020

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2014 ஏப்ரல் மாதத்தில், இலங்கை விமானப் படையினால் ரேடார் ரிசீவரொன்றும் அன்டெனா ஸ்கேனரொன்றும் பழுதுபார்ப்பதற்காக சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், அப் பொருட்கள் காணாமல் போயுள்ளதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      (ii) அப்பொருட்களை ஏற்றி இறக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிறுவனம் யாதென்பதையும்;

      (iii) அந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் யாவர் என்பதையும்;

      (iv) அந் நிறுவனம் இன்னும் இலங்கையின் யாதேனுமொரு அரச நிறுவனத்துக்கு சேவைகளை வழங்குகின்றதா என்பதையும்;

      (v) அப்பொருட்கள் காணாமல் போனதால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-19

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks