E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0110/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 110/2020 கௌரவ புத்திக பதிரண,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) இலங்கைக்குத் தனித்துவமான பல மூலிகைத் தாவரங்கள் உள்ளன என்பதையும்; (ii) சில தாவரங்களில் காணப்படுகின்ற இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் மரபணு என்பவற்றுக்காக காப்புரிமைப் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும்; (iii) அதன் காரணமாக நாட்டுக்கு பாரிய பொருளாதார நட்டம் ஏற்படுகின்றதென்பதையும்; அவர் அறிவாரா? (ஆ) (i) இலங்கைக்குத் தனித்துவமான மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்; (ii) ஆமெனில், இலங்கைக்குத் தனித்துவமான மூலிகைத் தாவரங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்; (iii) அவற்றில் காப்புரிமை கொண்டுள்ள தாவரங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்; (iv) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்; (v) காப்புரிமை இல்லாத மூலிகைத் தாவரங்களுக்காக அந்த அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்; அவர் குறிப்பிடுவாரா? (இ) காப்புரிமை கொண்டுள்ள மூலிகைத் தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற மருந்து வகைகளின் மூலம் அல்லது இதர உற்பத்திகளின் மூலம் வருடாந்தம் அரசாங்கத்திற்குக் கிடைக்கப்படுகின்ற அந்நியச் செலாவணி வருமானம் எவ்வளவு? (ஈ) (i) காப்புரிமை கொண்டுள்ள தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற மருந்து வகைகளை அல்லது ஏனைய உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு; (ii) உற்பத்திகளுக்கான அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிப்பதற்கு; எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-27

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-11-27

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks