பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0891/ ’10
கெளரவ ஹரின் பெர்னாந்து,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தை முறையாக நடைமுறைப்படுத்தாமையினால் வெளிமடை மரக்கறி விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் என்பதையும்,
(ii) தமது மரக்கறிகளுக்கு சிறந்த விலை கிடைக்காமை மற்றும் தமது உற்பத்திகளுக்கு உரிய வகையில் பணம் செலுத்தப்படாமை ஆகிய காரணங்களினால் இப்பொருளாதார மத்திய நிலையமானது விவசாயிகளின் நம்பிக்கை இழக்கப்பெற்ற இடமாக மாறியுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்த நிலைமையை மாற்றியமைத்து வர்த்தகருக்கும் விவசாயிக்கும் இடையில் சிக்கல்கள் ஏற்படாததும், பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக விவசாயிகளுக்கு மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்கக் கூடியதுமான வேலைத்திட்டமொன்றை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கும்,
(ii) இப்பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களை பரிசோதிப்பதற்காக விலைக்கட்டுப்பாட்டு அலகினதும், நிறுவை அளவை அலகினதும் உதவியைப் பெற்று விவசாயிகளின் உற்பத்திகள் சுரண்டப்படுவதைத் தடுக்கின்ற வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும்
துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-02-25
கேட்டவர்
கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.
அமைச்சு
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks