பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
157/2020
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் நகர அபிவிருத்திமற்றும் வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொலன்னாவை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சில பிரதேசங்கள் சில மணி நேர மழைவீழ்ச்சியின்போது கூட மழை நீரில் மூழ்கின்றன என்பதையும் ;
(ii) அதன் காரணமாக வீதிகளில் நீர் நிரம்பி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது என்பதையும்;
(iii) மழை நீர் வழிந்தோடுவதற்கான சரியான முறைமை காணப்படாதமையே இதற்கான பிரதான காரணம் என்பதையும்;
(iv) இதற்குத் தீர்வாக 25 பிரதான மதகுகளை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் ஐந்தின் பணிகள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலேயே பூர்த்திசெய்யப்பட்டன என்பதையும் ;
அவர் அறிவாரா ?
(ஆ) (i) மேற்குறிப்பிட்ட 25 மதகுகளில் இதுவரையில் அபிவிருத்தி செய்யப்படாத மதகுகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்த அரசாங்கத்திடம் வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும் ;
(ii) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-23
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-09-23
பதில் அளித்தார்
கௌரவ நாலக கொடஹேவா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks