E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0172/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 172/2020

      கெளரவ எஸ்.எம். மரிக்கார்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) மத்திய — கொழும்பு வைத்தியசாலையின் வெளி நோயாளார் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு அன்றாடம் பெருமளவிலான நோயாளர்கள் வருகை தருகின்ற போதிலும், மேற்படி வைத்தியசாலைகள், தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவதற்குத் தேவையான வாட்டுத் தொகுதிகள் காணப்பட்ட போதிலும், தங்கி சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற அதேவேளை வைத்தியசாலையைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் கூட தங்கி சிகிச்சை பெறுவதற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதனை அவர் அறிவாரா?

      (ஆ) (i) மத்திய — கொழும்பு வைத்தியசாலையில் வசதிகள் காணப்படுகின்ற போதிலும் தங்கி சிகிச்சை பெறுவதற்காக நோயாளர்கள் வேறு வைத்தியசாலைக்கு செல்வதற்கான இனங் காணப்பட்ட காரணங்கள் உள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அதற்கான தீர்வுகளாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மத்திய - கொழும்பு வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு 2020 ஆம் வருடத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந் நிதி ஒதுக்கீட்டினைக் கொண்டு தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளையும் அவற்றின் முன்னேற்றத்தினையும் வெவ்வேறாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-11

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-02-11

பதில் அளித்தார்

கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks