E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0207/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

    1. 207/2020

      கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கீழ் வரும் SLIATE நிறுவனத்தில் Higher National Diploma கற்கை நெறிகளை ஆரம்பித்து 03 வருடங்கள் கடந்த போதிலும், இது வரை தற்காலிகக் கட்டிடம் ஒன்றிலே அந்நிறுவனம் இயங்குகின்றதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) அதன் காரணமாக, Information Technology, English, Tourism ஆகிய கற்கை நெறிகள் மாத்திரம் நடாத்தப்படுகின்றன என்பதையும்;

      (ii) கற்கை நெறிகளுக்கு அவசியமான ஆய்வுகூட வசதிகள் இல்லையென்பதையும்;

      (iii) Accounting, Management ஆகிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க முடியாதுள்ளது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (இ) SLIATE நிறுவனத்திற்கு நிரந்தர கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு மன்னார் மாவட்ட செயலகத்தினால் மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குரிய உயிலங்குளம் பிரதேசத்தில் 05 ஏக்கர் அளவுடைய காணியொன்று அப்போதைய உயர் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகின்றது என்பதையும் அவர் அறிவாரா?

      (ஈ) மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள SLIATE நிறுவனத்தின் நிரந்தரக் கட்டிடத்தை உலக வங்கியின் பங்களிப்புடன் ஆரம்பிப்பது தொடர்பிலான பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், நிரந்தரக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிடுவாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-09

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-10-09

பதில் அளித்தார்

கௌரவ சீதா அரம்பேபொல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks