பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0282/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 282/2020

      கெளரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சர் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2005 - 2014 காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திற்கு சில கலைஞர்கள் விசேட அடிப்படையில் ஆட்சோ்ப்புச் செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறிவாரா;

      (ii) ஆமெனில், அவர்களின் பெயர்கள், ஆட்சோ்ப்புச் செய்யப்பட்ட திகதி மற்றும் பதவிகள் தனித்தனியே யாவை;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) தொண்டர் மற்றும் நிரந்தர படையணிகளுள் மேற்படி கலைஞர்கள் ஆட்சோ்ப்புச் செய்யப்பட்டுள்ள படையணி யாது;

      (ii) அவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டிருப்பின், பயிற்சிக் காலம் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட முகாமின் பெயர் என்பன யாவை;

      (iii) பயிற்சியின் பின்னர் மேற்படி ஒவ்வொரு கலைஞருக்கும் பொறுப்பளிக்கப்பட்ட கடமை, இணைப்புச் செய்யப்பட்ட படைப் பிரிவு, செலுத்தப்பட்ட சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் தனித்தனியே யாவை;

      என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) மேற்படி ஆட்சேர்ப்புகள் சட்டரீதியானவையா;

      (ii) இன்றேல், அதனுடன் தொடர்புடைய தரப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள மற்றும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை மேலும் அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-07-09

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks