E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0351/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 351/2020

      கௌரவ புத்திக பத்திறண,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) போட்டித் தன்மையுடன் கூடிய வெளிநாட்டு உற்பத்திகளை இறக்குமதி செய்வதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதகமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும்;

      (ii) இதனால் அவர்களுக்கு தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்திற்கு விற்பனைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும்போது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான முறையியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா;

      (ii) அவ்வாறாயின், அந்த முறையியல் யாது;

      (iii) இன்றேல், முறையியலொன்றைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா;

      (iv) ஆமெனில், மேற்படி முறையியல் தயாரிக்கப்படும் விதம் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-03-10

பதில் அளித்தார்

கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks