E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0417/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, பா.உ.

    1. 417/2020

      கௌரவ சுஜித் பெரேரா,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கேகாலை மாவட்டத்தின் யடியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் வீ ஒய என்ற பெயரில் நீர்த்தேக்கம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்த நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதன் நோக்கங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தால் இடம்பெயர நேரிடும் குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அவ்வாறு இடம்பெயரும் குடும்பங்களை மீளக்குடியமர்த்த எடுக்கும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (iii) இக்கருத்திட்டம் காரணமாக இடம்பெயரும் நபர்களின் வீடுகள் மற்றும் காணிகளுக்கு இழப்பீடு வழங்கும் முறைமை யாதென்பதையும்;

      (iv) இடம்பெயரும் அம்மக்கள் தொடர்பாக எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகள் யாவையெனவும்;

      அவர் மேலும் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-15

கேட்டவர்

கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-09-25

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks