E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0926/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.

    1. 0926/ ’10

      கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      கொழும்பு துறைமுகத்தின் புதிய கொள்கலன் இறங்குதுறையை நிர்மாணிக்கும்  கருத்திட்டத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த செலவினம் யாதென்பதையும்;

                 (ii)    அந்த மொத்தச் செலவினத்தில் உள்நாட்டிலிருந்து பெறப்படும் தொகை யாதென்பதையும்;

      (iii) வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் தொகை யாதென்பதையும்;

      (iv) அந்தக் கருத்திட்டத்திற்கு நிதி கிடைக்கும் வழிகள் யாவையென்பதையும்;

      (v) மொத்தச் செலவினத்தில் கடனாகக் கிடைக்கும் தொகை யாதென்பதையும்;

      (vi) கடன் தொகைகளை வழங்கும் நாடுகள், குறிப்பிட்ட வட்டி வீதங்கள் மற்றும் கடனை அடைக்கும் கால எல்லைகள் யாவையென்பதையும்;

      (vii) முழுமையான கருத்திட்டத்தையும் பூர்த்தி செய்ய எடுக்கும் காலம் யாதென்பதையும்

      அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

      (ஆ) இந்தக் கருத்திட்டத்தின் பணிகளுக்காக ஊழியர்களை ஆட்சோர்ப்புச் செய்யும் விதி முறை யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-03-25

கேட்டவர்

கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks