E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0487/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 487/2020

      கெளரவ துஷார இந்துனில் அமரசேன,— இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் சம்பளத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்கள் எத்தனை என்பதையும்;

      (ii) மேற்படி சம்பளத் திருத்தங்கள் மூலம் சம்பளங்கள் என்ன சதவீதங்களில் அதிகரிக்கப்பட்டன என்பதையும்;

      (iii) மேற்படி சம்பளத் திருத்தங்கள் இடம்பெற்ற சேவை வகுதிகளும் அதற்குரிய ஆட்களின் பெயர்களும் யாவை என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சம்பள அதிகரிப்புகளின் போது, மேல்நிலை அலுவலர்கள் தொடர்பாக மாத்திரம் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை அறிவாரா?

      (இ) நிறுவனத்தில் சேவையாற்றுகின்ற சகலருக்கும் சமமான அனுகூலங்கள் கிடைக்கும் வகையில் சம்பளத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-23

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

இளைஞர் மற்றும் விளையாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-02-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks