E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0530/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

    1. 530/2020

      கெளரவ ரோஹன பண்டார,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபையினால் நிர்வாகம் செய்யப்படும் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) அந்த நிலையங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலைக்குமென அனுமதிக்கப்பட்ட வைத்திய அலுவலர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (iv) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் தற்போது பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) அனுராதபுரம் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-09

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-02-09

பதில் அளித்தார்

கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks