E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0549/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.

    1. 549/2020

      கெளரவ சந்திம வீரக்கொடி,— தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) காலி, கிங்தோட்டையில் அமைந்துள்ள கிங்தோட்டை ப்ளைவூட் தொழிற்சாலையில் (முன்னர் - கிங்தோட்டை ஒட்டுப்பலகைத் தொழிற்சாலை) சேவையாற்றுகின்ற ஊழியர்களுக்குரிய ஊதியங்கள், கொடுப்பனவுகள், பணிக்கொடைக் கொடுப்பனவுகள் மற்றும் இழப்பீட்டுத் தொகை செலுத்துகைகள் உரிய முறையில் இடம்பெறுவதில்லை என்பதையும்;

      (ii) இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதென்பதையும்;

      (iii) நீதிமன்றத்தின் மூலம் ஏற்புடைய பணிப்பாளர்களுக்கு எதிராக பிடியாணை விடுக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி பிடியாணையின் பிரகாரம் ஏற்புடைய பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படாதமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி ஊழியருக்குரிய ஊதியங்கள், கொடுப்பனவுகள், பணிக்கொடைக் கொடுப்பனவுகள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      (iii) இன்றேல், ஏற்புடைய அலுவலர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.

அமைச்சு

தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks