E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0589/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வேலு குமார், பா.உ.

    1. 589/2020

      கௌரவ வேலு குமார்,— அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) கண்டி மாநகர சபையில் பணியாற்றும் தொழிலாளர்கள் குடியமர்ந்துள்ள மஹய்யாவ கிராமமானது கண்டி மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ளதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி கிராமம் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை யாது;

      (ii) அச்சந்தர்ப்பத்தில் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

      (iii) தற்போது இக்கிராமத்தில் காணப்படும் பதிவு இலக்கத்தைக் கொண்ட மின்சார வசதியுடன் கூடிய வீடுகளின் எண்ணிக்கை யாது;

      (iv) மேற்படி வீடுகளில் குடியமர்ந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) கடந்த காலத்தில் மஹய்யாவ கிராமத்திற்கென புதிய வீடமைப்புத் திட்டமொன்று வடிவமைக்கப்பட்டதென்பதை அவர் அறிவாரா?

      (ii) ஆமெனில், மேற்படி வீட்டுத் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துவாரா;

      (iii) அத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-10

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-03-10

பதில் அளித்தார்

கௌரவ ரொசான் ரணசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks