E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0601/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி உதயன கிரிந்திகொட, பா.உ.

    1. 601/2020

      கெளரவ உதயன கிரிந்திகொட,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) மத்திய அதிவேக நெடுஞ்சாலை —

      (i) கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

      (ii) கருத்திட்டத்திற்கு இன்றளவில் செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு செலவிடப்பட வேண்டியுள்ள எஞ்சிய தொகை எவ்வளவென்பதையும்;

      (iv) கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த திகதி யாதென்பதையும்;

      (v) கருத்திட்டத்திற்கு ஏற்புடையதாக கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முறைகேடுகள்/ தாமதங்கள் காரணமாக அதனை நிறைவுசெய்ய முடியுமென உத்தேசிக்கப்படுகின்ற திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இக்கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் —

      (i) ஒப்படைக்கப்பட்டுள்ள கம்பனிகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (ii) தாமதம் இடம்பெற்றுள்ள கம்பனிகளுக்கு அதன் நிர்மாணப் பணிகள் மீள வழங்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) இக்கருத்திட்டத்தின் கண்டி நகருக்கு அண்மித்த இறுதி நுழைவு காணப்படுகின்ற பிரதேசம் யாதென்பதையும்;

      (ii) கண்டியிலிருந்து கலகெதர வரையான வீதியில் காணப்படுகின்ற கடுமையான வாகன நொிசல் காரணமாக அதன் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிப்பதற்கு 30-45 நிமிடங்கள் வரை எடுப்பதால் கண்டி பிரதேச மக்களுக்கு இலகுவாக அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிப்பதற்கு நுழைவு வீதி அமைக்கப்படுமா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி அதிவேக நெடுஞ்சாலை நுழைவுகள் நிர்மாணிக்கப்படும் பிரதேசங்கள் யாவை என்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-05

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி உதயன கிரிந்திகொட, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks