E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0730/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அமரகீர்த்தி அதுகோரள, பா.உ.

    1. 730/2020

      கௌரவ அமரகீர்த்தி அத்துகோரள,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) இலங்கையில் —

      (i) வருடாந்த நன்னீர் மீன் உற்பத்தி மற்றும் தேவை யாது என்பதையும்;

      (ii) ஆகக்கூடிய நன்னீர் மீன் அறுவடையைப் பெற்றுத்தரும் மாவட்டம் யாது என்பதையும்;

      (iii) நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபடும் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) பொலன்னறுவை மாவட்டத்தில் —

      (i) நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மாதாந்த நன்னீர் மீன் அறுவடை எவ்வளவு என்பதையும்;

      (iii) நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் மேற்கொள்ளப்படுகின்ற குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் விடப்பட்ட மீன் குஞ்சுகளின் அளவு தனித்தனியாக யாது என்பதையும்;

      (ii) அக்காலப்பகுதியில், மேற்படி குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்பட்ட மீன் அறுவடை தனித்தனியாக யாது என்பதையும்;

      (iii) விடப்பட்ட மீன் குஞ்சுகளுக்கு ஒப்பீட்டு ரீதியாக பெறப்பட்ட மீன் அறுவடை தொடர்பில் திருப்தி அடைவாரா என்பதையும்;

      (iv) இன்றேல், அதற்கான காரணம் யாது என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) சிறிய குளங்களைச் சார்ந்து நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் மேலும் இச்சபையில் குறிப்பிடுவாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-05

கேட்டவர்

கௌரவ அமரகீர்த்தி அதுகோரள, பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks