E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0848/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வருண லியனகே, பா.உ.

    1. 848/2020

      கௌரவ வருண லியனகே,— பிரதம அமைச்சரும் நிதி அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) தேசிய வரவு – செலவு சுற்றறிக்கை 03/2016 இன் பிரகாரம், தாபிக்கப்பட்டுள்ள தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் இயற்கை அனர்த்தங்களின்போது நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) குறிப்பிட்ட காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் அனர்த்தங்களின்போது, ஒதுக்குப் பிரதேசங்கள் மற்றும் சட்டவிரோத காணிகளில் குடியிருப்பாளர்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) ஆயினும், 01/2020 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவ வழிகாட்டல் கோவையின் 04 (iii) ஆம் பந்தியின் கீழ், ஆதனத்தின் உரிமையை நிரூபிக்கும் காணி உறுதியின் பிரதி அல்லது ஏனைய பத்திரங்கள் தேவையென விதப்புரை செய்யப்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) இதன் காரணமாக அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒதுக்குப் பிரதேசங்கள், பாதைகளுக்கான ஒதுக்குப் பிரதேசங்கள் மற்றும் புகையிரத பாதைகளுக்கான ஒதுக்குப் பிரதேசங்கள் போன்ற காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளில் அனுமதியின்றி குடியமர்ந்துள்ள நபர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (இ) (i) மேலே (ஆ) (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், குறிப்பிட்ட நிவாரணங்கள் வழங்கப்படும் விதம் யாது;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-10

கேட்டவர்

கௌரவ வருண லியனகே, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks