E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0852/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரேமலால் ஜயசேக்கர, பா.உ.

    1. 852/2020

      கெளரவ பிரேமலால் ஜயசேகர,— நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) இரத்தினபுரி மாவட்டத்தில் உலக வங்கி உதவித் திட்டத்தின் கீழ் சமுதாய நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டமொன்று நடைமுறையிலுள்ளது என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) அக்கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் முடிவுறுத்தப்படவுள்ள வருடங்கள் யாவையென்பதையும்;

      (ii) இரத்தினபுரி மாவட்டத்தில் இக்கருத்திட்டத்திற்காக மாவட்ட அலுவலகமொன்று தாபிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) அதன் பதவியணி யாதென்பதையும்;

      (iv) அதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிலிருந்தும் வெளியிலிருந்தும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனை என்பதையும்;

      (v) வெளியிலிருந்து ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அடிப்படை யாதென்பதையும்;

      (vi) மேற்படி நிறுவனம் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (vii) இன்றளவில் மேற்படி கருத்திட்டத்தின் நிருவாகச் செலவினம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மேற்படி கருத்திட்டத்தின் மூலம் தற்போது நடைமுறைபடுத்தப்படுகின்ற நீர் விநியோகத் திட்டங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவற்றுக்காக செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) எதிர்காலத்தில் நடைமுறைபடுத்தப்படும் நீர் விநியோகத் திட்டங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iv) அதற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;

      (v) அக்கருத்திட்டத்தின் மூலம் துப்பரவேற்பாட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் அதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-08

கேட்டவர்

கௌரவ பிரேமலால் ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-01-08

பதில் அளித்தார்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks