E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0865/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அமரகீர்த்தி அதுகோரள, பா.உ.

    1. 865/2020

      கௌரவ அமரகீர்த்தி அதுகோரள,— பிரதம அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட பதவியணி உள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்த எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) மேற்படி எண்ணிக்கையானது நிரந்தர மற்றும் அமய அடிப்படையில் எத்தனையென்பதையும்;

      (iv) 2015 ஆம் ஆண்டு கூட்டுத்தாபனத்தில் காணப்பட்ட நிரந்தர மற்றும் அமய ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (v) 2015 முதல் 2019 வரை ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள நிரந்தர, அமய மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் ஏனைய அமைச்சுகளுக்கு விடுவிக்கப்பட்டிருந்த கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவர்களுக்குச் செலுத்தப்பட்ட சம்பளங்கள் உரிய அமைச்சுக்களிலிருந்து மீள்நிரப்பல் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) (i) மேற்படி நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருந்த 98 ஊழியர்கள், 2015 பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு வேறு அமைச்சுக்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பதனை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்த ஊழியர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ள சம்பளங்கள் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

      (iii) அக்கொடுப்பனவுகள் மீள்நிரப்பல் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) மேற்படி ஊழியர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-10

கேட்டவர்

கௌரவ அமரகீர்த்தி அதுகோரள, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-03-10

பதில் அளித்தார்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks