பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
874/2020
கௌரவ இரான் விக்கிரமரத்ன,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) பாகிஸ்தான், நேபாளம், பங்காளதேசம், மாலைதீவு மற்றும் மியன்மார் ஆகியவற்றை உள்ளிட்ட 80 நாடுகள் கொவிட் - 19 தொற்றின் பொருளாதாரத் தாக்கத்தை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) அவசர உதவிகளைப் பெற்றிருப்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) இலங்கை அரசாங்கம், கொவிட் - 19 தொற்று காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியைக் கோரியுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறெனில், கோரப்பட்டுள்ள உதவியின் தன்மையையும்;
(iii) மேற்குறிப்பிட்ட உதவி கோரப்பட்ட திகதியையும்;
(iv) மேற்குறிப்பிட்ட கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் பதிலளித்துள்ளதா என்பதையும்;
(v) ஆமெனில், சர்வதேச நாணய நிதியத்தின் பதிலையும்;
(vi) இதுவரை நிவாரணத்தைப் பெற்ற 80 நாடுகள் போலல்லாது இலங்கை அரசாங்கம் நிவாரணத்தைப் பெற்றிருக்காமைக்கான காரணத்தையும்;
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-05
கேட்டவர்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks