E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0876/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

    1. 876/2020

      கௌரவ இரான் விக்கிரமரத்ன,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை அரசாங்கம் கடன் மீளச்செலுத்துதல் தொடர்பாக சுதந்திரம் அடைந்ததிலிருந்து கறைபடாத வரலாற்றை பேணி வந்ததாக மீண்டும் மீண்டும் கூறியதையும்;

      (ii) இலங்கையின் மீளச்செலுத்தும் இயலுமையை மூடீஸ் கடன் தரப்படுத்தும் முகவராண்மை B2 இலிருந்து Caa1 வரை இரு மட்டங்களால் தரவிறக்கம் செய்துள்ளமையையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) இலங்கையின் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான வட்டி மற்றும் கடன்தீர்ப்புக் கொடுப்பனவுகளின் மொத்தப்பெறுமதியையும்;

      (ii) 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான எதிர்வுகூறப்பட்ட மொத்த வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையின் பெறுமதியையும்;

      (iii) 2020 ஆம் ஆண்டுக்கான முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான அரசாங்கத்தின் வருமானத்தையும்;

      (iv) 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான எதிர்வுகூறப்பட்ட மொத்த வருமானத்தின் பெறுமதியையும்;

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (இ) (i) தவணைத் தவறுகையை தவிர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும்;

      (ii) அரசாங்கம் கடனை மீளச்செலுத்தத் தவறுமாயின் இலங்கையின் பொருளாதாரம் மீதான தாக்கத்தையும்;

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-08

கேட்டவர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-07-06

பதில் அளித்தார்

கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks