E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1020/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், பா.உ.

    1. 1020/2020

      கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை அப்போது காணப்பட்ட வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சுப் பொறுப்பை வகித்த அமைச்சர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி அமைச்சின் கீழ் காணப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்குறிப்பிட்ட அ(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட லங்கா சதொச மற்றும் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்களினால் பேணிவரப்படுகின்ற வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்கையில் அல்லது உள்நாட்டு ரீதியில் கொள்வனவு செய்கையில் பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கை முறைகள் யாவை என்பதையும்;

      (ii) மேற்குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பொருட்ளை இறக்குமதி செய்கையில் அல்லது உள்நாட்டு ரீதியில் கொள்வனவு செய்கையில் வெளிப்படைத்தன்மை பேணப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) இன்றேல், ஏதேனும் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பதையும்;

      (iv)​ ஆமெனில், அது தொடர்பாக முழுமையான கணக்காய்வு நடத்தப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-10

கேட்டவர்

கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-07-06

பதில் அளித்தார்

கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks