பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1353/2020
கௌரவ அநுர திசாநாயக்க,— பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015.01.08 ஆம் திகதி முதல் 2019.11.16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல் பற்றிக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தவிசாளராகவும் உறுப்பினர்களாகவும் பணியாற்றியவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி ஆணைக்குழுவை பேணி வருவதற்காக அரசாங்கத்தினால் உறப்பட்ட மொத்த செலவு யாதென்பதையும்;
(iii) மேற்படி ஆணைக்குழுவின் தவிசாளரினதும் ஒவ்வொரு உறுப்பினர்களினதும் சம்பளங்கள், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய சிறப்புரிமைகளுக்காக உறப்பட்ட செலவு தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தவிசாளர் உட்பட மேற்படி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தற்போது அரசாங்க பதவிகளை வகிக்கின்றனரா என்பதையும்;
(ii) ஆமெனில், அவர்கள் ஒவ்வொருவரும் வகிக்கும் அரசாங்க பதவிக்காக மாதாந்தம் வழங்கப்படும் சம்பளங்கள், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய சிறப்புரிமைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-02-23
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-02-23
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks