பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1365/2020
கெளரவ விஜித ஹேரத்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) "சமன் கெக்குல", எம்பலவ, தெமட்டமலுவ, குருநாகல் எனும் முகவரியில் பேணிவரப்பட்ட இயோன் லங்கா இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பில்ம் ப்ரடக்ஷன் இன்டர்நெஷனல் கம்பனி பிரைவேட் லிமிடெட் எனப்படும் நிதி நிறுவனத்தின் நடவடிக்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்த நிறுவனத்தை தடை செய்ததற்கான காரணங்கள் யாவை;
(ii) அதன் பிரதானி மற்றும் பணியாட்டொகுதி அங்கத்தவர்களின் பெயர்கள் யாவை;
(iii) அந்த நிறுவனம் கிளைகளைக் கொண்டதாக இருப்பின், அவற்றின் பெயர்கள் யாவை;
(iv) அந்த நிறுவனம் மற்றும் அதன் ஒவ்வொரு கிளைக்குமுரிய சொத்துக்கள் தனித்தனியாக யாவை;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) பணம் மற்றும் வட்டி என்பவற்றை இழந்துள்ளதன் காரணமாக மேற்படி நிறுவனத்தின் வைப்பாளர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அவர் அறிவாரா?
(ஈ) (i) வைப்பாளர்களின் பெயர்கள் மற்றும் வைப்புத் தொகை என்பன தனித்தனியாக யாவை என்பதையும்;
(ii) வைப்பாளர்களின் பணத்தையும் வட்டியையும் மீள்செலுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்காக எடுக்கப்படும் காலம் என்பன யாவை என்பதையும்;
(iii) இவ்விடயம் தொடர்பில் தவறாளிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-09-06
கேட்டவர்
கௌரவ விஜித ஹேரத், பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks