E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1554/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 1554/ ’11

       

      கெளரவ ரவி கருணாநாயக்க,—  கலாசார, கலை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)    (i)     விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன கலாசார நிலையம், கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகப் பதவி வகித்த 2002- 2004 வரையான காலப்பகுதியில் சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரு நன்கொடையா என்பதையும்;

      (ii) அது ஒரு பூரணமான நன்கொடையா என்பதையும்

      அவர்  கூறுவாரா?

      (ஆ) (i) சீன கலாசார நிலைய நிர்மாணத்தின் ஆரம்பத் திகதி மற்றும் முடிவுத் திகதி ஆகியவற்றையும்;

      (ii) மேற்படி கருத்திட்டம் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட மொத்தச் செலவு மற்றும் அது முடிவுறும் வேளையில் இறுதிச்செலவு ஆகியவற்றையும்;

      (iii) ஊழியத்துக்காகச் செலவுசெய்யப்பட்ட  செலவினத்தையும்

      அவர் கூறுவாரா?

      (இ) (i) இக்கருத்திட்டத்தில் வேலைக்கமர்த்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெவ்வேறாகவும்;

      (ii) மேற்படி கருத்திட்டத்துக்காக கம்பனி அல்லது நாடு ஒன்றினால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பதவிப்பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) சீன கலாசார நிலைய நிர்மாணக் கருத்திட்டத்தின்  தொழிலாளர்கள் சார்பாகச் செலுத்தப்பட்ட ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி ஆகியவற்றின் பெறுமதிகளையும்

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்? 

       

கேட்கப்பட்ட திகதி

2012-04-18

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கலாசார, கலை அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-03-07

பதில் அளித்தார்

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks