E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1705/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 1705/ ’11

       

      கெளரவ ரவி கருணாநாயக்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      உலகம் முழுவதிலுமுள்ள இலங்கைத் தூதரகங்களின் அல்லது உயர் ஸ்தானிகராலயங்களின் தூதுவர்கள்/உயர் ஸ்தானிகர்களின் பெயர்களை நாடுகளின் அடிப்படையிலும்;

      (ii) தனது பொறுப்பு நிலையத்திலிருந்து ஒவ்வொரு உயர் ஸ்தானிகராலும் அல்லது தூதுவராலும் கடமை புரியப்படுகின்ற ஏனைய நாடுகள் ஏதாவது இருப்பின் அவற்றினையும்;

      (iii) இராஜதந்திரச் சேவையிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களின்/ உயர்ஸ்தானிகர்களின் அனுபவத்தினையும்;

      (iv) அரசியல் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களின்/ உயர்ஸ்தானிகர்களின் அனுபவம் அல்லது தகைமை ஆகியவற்றினையும்;

      (v) இலங்கையின் சார்பில் ஒவ்வொரு தூதரகமும் கடந்த 5 வருடங்களில் ஈட்டிய குறிப்பிடத்தக்க அடைவுகளையும்

      யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) ஒவ்வொரு தூதரகத்திலும் அல்லது உயர் ஸ்தானிகராலயத்திலும் இலங்கையிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள பணியாள் தொகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கையினையும்;

      (ii) ஒவ்வொரு தூதரகத்திலும் அல்லது உயர் ஸ்தானிகராலயத்திலும் உள்ள மேற்குறிப்பிடப்பட்ட பணியாளர்களுக்கான வருடாந்த செலவினை வெவ்வேறாகவும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல் ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-04-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-01-23

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நியோமால் பெரேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks