பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0387/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

    1. 387/2023

      கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2021 ஆம் ஆண்டு மழைக்காலத்தில் மண்சரிவுக்கு உள்ளான கொழும்பு-கண்டி பிரதான பேருந்து வீதியில், பஹல கடுகண்ணாவைப் பிரதேசத்தின், மேற்பகுதியில் புகையிரத வீதிக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இதுவரையிலும் நீங்கவில்லை என்பதையும்;

      (ii) மேற்படி பிரதேசத்தினது மண் அடுக்கின் கீழ் காணப்பட்ட நீர் வடிப்பினை தேசிய கட்டட ஆராச்சி நிறுவனம் அகற்ற நடவடிக்கை எடுத்தபோதும், அந்தப் பிரதேசம் தொடர்ந்தும் தீவிர அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) அந்தப் பிரதேசத்தை அபாய நிலையிலிருந்து மீட்க இன்றளவில் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (ii) கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணிப்பதற்கு உள்ள மாற்று வீதிகளை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) கடுகண்ணாவை தொடக்கம் பலன புகையிரத நிலையம் வரையுள்ள புகையிரத வீதி எப்போதும் மண்சரிவைச் சந்திக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதால், அதுகுறித்து ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-07

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-08

பதில் அளித்தார்

கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks