E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0388/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

    1. 388/2023

      கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கண்டி தேசிய வைத்தியசாலையில் மனித உறுப்புகள் சம்பந்தப்பட்ட தீத்தொழில் முன்னெடுக்கப்படுவதாக 2022.01.27ஆம் திகதி "லக்சர" சமூக ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையொன்றினால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) மேற்படி தீத்தொழில் தொடர்பில் விரிவான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கண்டி தேசிய வைத்தியசாலையின் நிபுணத்துவ வைத்தியர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது என்பதையும்;

      அவர்அறிவாரா?

      (ஆ) (i) "இறந்த நன்கொடையாளர் உறுப்பு தான தேசிய திட்டத்தின்" கண்டி வலயத்திற்கான பிரதம தொழிற்பாட்டு பொறுப்பதிகாரி, அந்த வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளதற்கான தகவல்கள் உள்ளனவா என்பதையும்;

      (ii) இத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்படுவதன் மூலம் கண்டி தேசிய வைத்தியசாலை குறித்து மக்கள் மத்தியில் தவறானதொரு மனப்பாங்கு உருவாவதையும், வைத்தியசாலைக் கட்டமைப்பு மீதான நம்பிக்கை தகர்க்கப்படுவதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (iii) இக் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாயின், அதையொட்டி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-21

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks