E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0420/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

    1. 420/2023

      கௌரவ கயந்த கருணாதிலக்க,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதற்கு புதிதாக அடையாளங் காணப்பட்ட நாடுகள் யாவை என்பதையும்;

      (iii) மேற்குறிப்பிட்ட நாடுகளில் வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iv) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் வெளிநாடுகளில் பணிபுரிந்த இலங்கையர்களினால் இலங்கைக்கு ஈட்டிக்கொடுக்கப்பட்ட அந்நியச் செலாவணி ஆண்டு வாரியாக தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 6 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தற்சமயம் நடைமுறையில் உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (iii) மேற்படி ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் பயனடையும் நபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-11

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks