பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0433/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 433/2023

      கௌரவ புத்திக பத்திறண,— வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திருமதி பிரேமா தாபரே எழுதி, திரு.வீரசேன குணதிலக்க பாடிய "கொபெய்யனே வரெல்லா" எனும் பாடல் இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்திற்கான வானொலி அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை;

      (iii) மேற்படி தடையினை விதிப்பதற்கு முன்னர் அது தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

      (iv) ஆமெனில், அவ் விசாரணை யாரால் மேற்கொள்ளப்பட்டது;

      (v) மேற்குறிப்பிட்ட பாடல், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்திற்கான அலைவரிசையொன்றில் இறுதியாக ஒலிபரப்பப்பட்ட திகதி மற்றும் நேரம் யாது;

      (vi) எதிர்காலத்தில் குறிப்பிட்ட தடையினை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-07

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks