பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0435/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 435/2023

      கௌரவ புத்திக பத்திறண,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)     இறக்குமதி செய்யப்படுகின்ற மதுசாரப் பொதிகளில் காணப்படும், மெட்ராஸ் செக்கியுரிட்டி பிரின்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படும் ஸ்டிக்கரில் உள்ளடங்கியுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி பாதுகாப்பு வழிமுறைகளை உள்ளடக்குவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (iii) அவற்றில் மேற்படி பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கியிருப்பதாக சர்வதேச தரநிலை நிறுவனமொன்றினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அதனை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் தெரிவிப்பாரா?

      (ஆ) (i) விசேட டீ.என்.ஏ அடங்கியுள்ள மை வகைகளைப் பயன்படுத்தி அச்சிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள பாதுகாப்புக் குறியீடுகளிலும் மேற்படி மைகளிலும் அடங்கியுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (ii) மேற்படி குறியீடுகள் அச்சிடப்படும் முறைமையிலுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் யாவையென்பதையும்;

      (iii) விநியோகிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் அவ்வாறு அச்சிடப்படும் குறியீடுகள் மற்றும் மைகளில் உள்ளடங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணமொன்று உள்ளதா என்பதையும்;

      அவர் தெரிவிப்பாரா?

      (இ) (i) பெறுகைச் செயன்முறையின்றி அச்சிடப்பட்ட 1000 ஸ்டிக்கர்களை, 5.99 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு விநியோகிப்பதற்காக மேற்படி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கேள்விப்பத்திரத்தின் மீது, அதே விலைக்கு, டிஜிட்டல் குறியீடு ஒன்றை கொள்வனவு செய்வதை அங்கீகரித்த அடிப்படை யாதென்பதையும்;

      (ii) அதற்கான அங்கீகாரத்தை வழங்கிய உத்தியோகத்தர்கள் யாவர் என்பதையும்;

      (iii) அதனுடன் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      மேலும் அவர் தெரிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-08-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-23

பதில் அளித்தார்

கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks