E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0820/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

    1. 820/2023

      கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) குடும்ப அலகினதும் தமது பிள்ளைகளினதும் பாதுகாப்புக்கு பெண்கள் தனித்துவமான பணியை ஆற்றுகின்றனர் என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) இலங்கையின் மொத்த பெண்கள் சனத்தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) அதில் பாடசாலை செல்லும் வயதிலுள்ள பெண்கள் சனத்தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கையின் மொத்த குடும்ப அலகுகளில் தந்தை அல்லது தாய் இல்லாத குடும்ப அலகுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி குடும்ப அலகுகளிலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) அப் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதற்கும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) இலங்கையின் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) குழந்தைத் தாய்மார்கள் உருவாவதற்கு ஏதுவாக அமைந்துள்ள சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகள் யாவை என்பதையும்;

      (iii) இந்த நிலைமையைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-20

கேட்டவர்

கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks