பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
851/2023
கௌரவ காமினி வலேபொட,— சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்தின் பிரகாரம், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு அளிக்கப்பட வேண்டுமென தற்போதைய அரசாங்கத்தின் பிரதானிகள் தெரிவித்துள்ளார்கள் என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) இன்றளவில் மத்திய அரசாங்கத்துக்குரிய காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு மாகாணத்தில் வசிக்கும் குடியிருப்பாளரொருவர் இன்னுமொரு மாகாணத்திலுள்ள காணியொன்றைக் கொள்வனவு செய்யும்போது பின்பற்ற வேண்டியுள்ள புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் யாவை என்பதையும்;
(iv) அவ்வாறான நிலைமையில் தமது மாகாணத்திலுள்ள காணிகளை வெளிநாட்டவருக்கு அல்லது வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பனை செய்வதற்கோ அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கோ யாதேனுமொரு மாகாண சபைக்கு அதிகாரம் கிடைக்குமா என்பதையும்;
(v) மாகாண சபையொன்றுக்கு அதன் தற்றுணிபின் படி மேற்படி அதிகாரங்களை நிறைவேற்றிக்கொள்ள உரிமை கிடைக்குமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-26
கேட்டவர்
கௌரவ காமினி வலேபொட, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-08-08
பதில் அளித்தார்
கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks