E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2156/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. 2156/ ’11

       

      கௌரவ ரீ. ரன்ஜித் த சொய்சா,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, கிரிமெற்றிதென்ன பிரதேசத்தில் அமைந்துள்ள பீங்கான் ஓட்டுத் தொழில்சாலை சுமார் ஒரு வருட காலமாக மூடப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) மேற்படி தொழில்சாலை பிரதேசத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியிருந்தது என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி நிறுவனத்தை மூடுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி நிறுவனத்தை மூடும் போது அதில் சேவையாற்றிய அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நட்டஈடு செலுத்தப்பட்டதா என்பதையும்;

      (iii) இன்றேல், அதற்குக் காரணமாயமைந்த விடயங்கள் யாவை என்பதையும்;

      (iv) பிரதேச மக்களினதும், நாட்டினதும் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக மேற்படி தொழில்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்பதையும்;

      (v) அவ்வாறாயின், அதற்கென திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-05-22

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks