E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2157/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. 2157/ ’11

       

      கௌரவ ரீ. ரன்ஜித் த சொய்சா,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகெபொல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ரன்வல அரசாங்க வைத்தியசாலை மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது என்பதையும்;

      (ii) மேற்படி வைத்தியசாலையில் மருத்துவர்கள் மற்றும் ஏனைய பதவியணியின் அலுவலர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது என்பதையும்;

      (iii) தற்போது அங்கு ஒரு மருத்துவர் மாத்திரமே சேவையாற்றுகிறார் என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி வைத்தியசாலையில் தங்கியிருந்து மற்றும் வெளிவாரியாக சிகிச்கை பெறுகின்ற தற்போதைய நோயாளர்களின் சராசரி எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) மேற்படி வைத்தியசாலைக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் பதவியணியினரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iii) ரன்வல அரச வைத்தியசாலை இந்நிலைமைக்கு உள்ளாவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவர்கள் மற்றும் பதவியணியினரை துரிதமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      (v) அவ்வாறாயின், அதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-05-23

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks