E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1619/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

    1. 1619/2023

      கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நீர் மாசடைவதை தடுக்கும் நோக்கில் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 150 நதிகளைப் பாதுகாக்கும் "சுரகிமு கங்கா" கருத்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்;

      (ii) அக்கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

      (iii) மேற்படி கருத்திட்டத்திற்கு நிதி பெற்றுக்கொள்ளப்படும் மூலங்கள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி கருத்திட்டத்திற்கென தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) "சுரகிமு கங்கா" கருத்திட்டத்தின் கீழ் இன்றளவில் பாதுகாக்கப்பட்டுள்ள நதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (ii) மேற்படி நதிகளின் எண்ணிக்கையை கருத்திற்கொள்ளும் போது, மேற்கூறப்பட்ட கருத்திட்டத்தின் செயலாற்றுகை குறைந்த மட்டத்தில் காணப்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iii) ஆமெனின், அதற்கு ஏதுவான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-19

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-07-19

பதில் அளித்தார்

கௌரவ நஸீர் அஹமட், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks