E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1638/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.

    1. 1638/2023

      கெளரவ மிலான் ஜயதிலக்க,— வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ரிதியகம, சபாரி பூங்காவில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ள திகதி யாது என்பதையும்;

      (iii) மேற்படி பூங்காவில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலங்குகள் முறையாக கண்காணிக்கப்படுகின்றனவா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை மேற்படி பூங்காவை பார்வையிட வருகைதந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை;

      (ii) குறித்த காலப்பகுதியில் மேற்படி பூங்காவின் வருமானம்;

      என்பன ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-19

கேட்டவர்

கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-07-19

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks