E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1678/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

    1. 1678/2023
      கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
      (அ) (i) இலங்கையில் விவசாய உற்பத்திகளை ஊக்குவிப்பதன் பொருட்டு நெல், சோளம், மிளகாய், பெரிய வெங்காயம், சோயா மற்றும் உருழைக்கிழங்கு ஆகிய பயிர்களுக்கென இலவச காப்புறுதிக் காப்பீடு வழங்கப்படுவதுடன், அனர்த்தங்கள் காரணமாக மேற்குறிப்பிட்ட பயிர்கள் அழிவடைகையில் கமத்தொழில் அமைச்சு காப்புறுதி இழப்பீடுகளை வழங்குகின்றது என்பதையும்;
      (ii) ஆயினும், உழுந்து மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்களுக்கென இத்தகைய காப்புறுதி காப்பீடு வழங்கப்படாமையினால், இப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனர்த்தங்களின்போது பாரிய சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதையும்;
      அவர் அறிவாரா?
      (ஆ) ஆமெனில், உழுந்து மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கென இலவச காப்புறுதி காப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-05

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-07-05

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks