E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1681/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

    1. 1681/2023

      கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மன்னார் மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு நீர்வழங்கல் சபையினால் வழங்கப்படும் குடிநீரானது, கற்பாறைகளை அண்டியதாக பெறப்படும் நிலத்தடி நீர் என்பதால் சுகாதாரத்திற்கு தீங்கானது என்பதையும்;

      (ii) கடந்த காலங்களில் நீர் வழங்கல் சபையினால் கல்லாறு நீர்த்தேக்க குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், இதுவரை அத்திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) கல்லாறு நீர்த்தேக்க குடிநீர்த் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றெல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-03

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-03

பதில் அளித்தார்

கௌரவ ஜீவன் தொண்டமான், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks