E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1801/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

    1. 1801/2023

      கௌரவ குமாரசிறி ரத்னாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மொனராகலை மாவட்டத்திலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மேற்படி நிலையங்களில் நடாத்தப்பட்டு வருகின்ற முழுநேர மற்றும் பகுதிநேர பாடநெறிகள் தனித்தனியே யாவை என்பதையும்;

      (iii) மேற்படி நிலையங்களில் தற்போது பாடநெறிகளைப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இளைஞர், யுவதிகள் தொழில்சார் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் தொழில்வாய்ப்புகளுக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றனரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-23

கேட்டவர்

கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-05-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks