E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1816/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

    1. 1816/2023

      கெளரவ அஜித் மான்னப்பெரும,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அவசர மின் கொள்வனவுகளுக்காக இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரிய சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக தனித்தனியே யாதென்பதையும்;

      (ii) மேற்படி சந்தர்ப்பங்களுள் அனுமதி அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களின் எண்ணிக்கையும் அனுமதி அளிக்கப்படாத சந்தர்ப்பங்களின் எண்ணிக்கையும் தனித்தனியே யாதென்பதையும்;

      (iii) அவசர மின் கொள்வனவுகளுக்கு அனுமதி வழங்கப்படாமையின் காரணமாக இலங்கை மின்சார சபைக்குக் கிடைத்த நிதிரீதியான இலாபம் எவ்வளவென்பதையும்;

      (iv) அவசர மின் கொள்வனவுகளைத் தவிர்ப்பதற்கு தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-25

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-04

பதில் அளித்தார்

கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks