E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2535/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

    1. 2535/2023

      கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் நிலையம் தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) மேற்படி பொலிஸ் நிலையம் தாபிக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர் யார் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கிண்ணியா பொலிஸ் நிலையம் நீண்ட காலமாக தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றில் பேணிவரப்படுவதன் காரணமாக இப் பொலிஸ் நிலையத்திற்கென நிரந்தரக் கட்டிடமொன்றை நிர்மாணிக்க முடியாமற் போயுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி பொலிஸ் நிலையத்திற்காக அரச காணியொன்றையும் நிரந்தரக் கட்டிடமொன்றையும் பெற்றுக்கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-19

கேட்டவர்

கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2024-01-10

பதில் அளித்தார்

கௌரவ டிரான் அலஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks