E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2689/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

    1. 2689/2023

      கௌரவ கே.பீ.எஸ். குமாரசிறி,—  கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     2022/2023 ஆம் ஆண்டிற்கான பெரும்போகத்தின் நெல் அறுவடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதனால் நெல் கொள்வனவு செய்வதற்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது என்பதையும்;

                 (ii)    ஒரு ஏக்கர் காணியில் நெற் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு செலவாகும் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) நெல்லின் விலையைத் தீர்மானிக்கும்போது மேற்படி தொகை அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) தனியார் வியாபாரிகளினால் மிகக் குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதை நிறுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) நெல்லின் மூலம் அரிசி அல்லது வேறு உற்பத்திகளை மேற்கொண்டு இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும், ஏற்றுமதி சந்தையை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-04-26

கேட்டவர்

கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks