E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2315/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2315/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— தொழில், தொழில் உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      1958 ஆம் ஆண்டின் ஊழியர் சேமலாப நிதியச் (EPF) சட்டம் 2012 சனவரி 18ஆம் திகதியன்று திருத்தப்பட்டமையையும்;

                (ii)     காணி கொள்வனவு செய்வதற்கும் கட்டிடமொன்றை நிர்மானிப்பதற்கும் ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள பணத்தை உபயோகப்படுத்தக்கூடியவாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையையும்

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) மேற்சொன்ன கட்டிடத்திற்கென மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தச் செலவினத்தையும்;

      (ii) அக்கட்டிடத்தின் ஒரு சதுர அடிக்கு மதிப்பீடு செய்யப்பட்ட செலவினத்தையும்;

      (iii) அக்கட்டிட நிர்மாணத்திற்குக் கோரப்பட்ட கேள்விப்பத்திரங்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு கேள்விப் பத்திரதாரரினதும் வினைமனுப் பெறுமதி ஆகியவற்றை வெவ்வேறாகவும்;

      (iv) அக்கட்டிடத்தின் தேவைப்பாட்டை 35 மாடிகளாக திட்டமிடலுக்குப் பொறுப்பாகவிருந்த நபரையும்

      அவர் கூறுவாரா?

      (இ) (i) கட்டிட நிர்மாணங்களில் ஊழியர் சேமலாப நிதியம் ஏன் வீண்விரயம் செய்யப்படுகின்றதென்பதையும்;

      (ii) மேற்படி பணிக்காக அரச நிதியங்கள் பயன்படுத்தப்படாமைக்கான காரணத்தையும்

      அவர் கூறுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-28

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

தொழில், தொழில் உறவுகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-04-23

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks